June 17, 2025 22:17:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போன 13 வயது சிறுமி சடலமாக மீட்பு ; முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் காணாமல் போன 13 வயதான சிறுமி ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி முதல் காணாமல்போய் இருந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த சிறுமியின் சடலம் மூங்கிலாறு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் இடம் பெற்ற நிலையில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.