January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு யாழ். அகில இலங்கை சைவ மகா சபையால் பாதயாத்திரை!

மார்கழி மாத திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு யாழில் அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று (18) காலை முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான இலங்கையை தழுவிய சிவபக்தர்களை உள்ளடக்கியவாறு அகில இலங்கை சைவ மகா சபை பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட சிவனடியார்களை மட்டும் உள்ளடக்கியவாறு இம்முறை சுகாதார வழிகாட்டுதல்களுடன் இடம்பெற்றது.

அதற்கமைய யாழ்ப்பாணம் – மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் ஆரம்பமாகி சிவனுடைய நாணயங்களையும் தேவார பதிகங்களையும் உச்சரித்தவாறு பனிப்புலம், சுழிபுரம் பகுதிகளிலுள்ள ஆலயங்களை தரிசித்த வண்ணம் பொன்னாலை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள இராவணேஸ்வரம் தலத்தில் நிறைவடைந்தது.

மேலும் இந்த பாதயாத்திரையின் போது சுழிபுரம் மேற்கு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயத்தில் அகில இலங்கை சைவ மகாசபையால் அச்சிடப்பட்ட நாள்காட்டி வெளியீடும் அதனைத் தொடர்ந்து பிடியரிசித்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்பாக அறநெறி மாணவர்களிடம் பொதிப்பை ஒன்று வழங்கப்பட்டு அவர்களின் இல்லங்களில் உணவுத் தயாரிப்பின் போது ஒரு பிடி அரிசியை இட்டு அதனை நிரப்பி எதிர்வரும் தைப்பூச தினத்தில் அவை சேகரிக்கப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது .

இன்றைய பாதயாத்திரையில் அகில இலங்கை சைவ மகாசபையின் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார், அகில இலங்கை சைவ மகாசபையின் பொருளாளர் அருள் சிவானந்தன், இலங்கை சித்தர் பீட நிறுவுனரும் குரு முதல்வருமான நவனீத சித்தரும், சிவனடியார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.