January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடன் பெறும் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தரமிறக்கியது ஃபிட்ச்

ஃபிட்ச் தரப்படுத்தல்கள் (Fitch Ratings) இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை மேலும் தரமிறக்கியுள்ளது.

தரப்படுத்தல்களில் சிசிசி (CCC) தரத்தில் இருந்த இலங்கை இப்போது, சிசி (CC) வரை தரமிறக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபிட்ச் தரப்படுத்தல்கள் நேற்று வெளியாகியுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு நவம்பர் மாதம் முடிவடையும் போது 1.5 பில்லியன் டொலர் வரை குறைவடைந்துள்ளது.

ஃபிட்ச் தரப்படுத்தல் நாடுகளின் கடன் பெறும் தகைமையை மதிப்பிடுகிறது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஃபிட்ச் தரப்படுத்தல்கள் தவறானது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.