
இலங்கையில் வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மூன்று நாடுகளிடம் கடன் பெறுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.
சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, டொலர் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் 140 மில்லியன் டொலர் சலுகையொன்று வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைக் குறைத்துக்கொண்டு கடன் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.