May 3, 2025 16:37:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு

ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்தும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

கடந்த 23 ஆம்  திகதி பாராளுமன்றத்தில் 20 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அதனை செயற்படுத்தும் ஆவணத்தில்  சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று கையொப்பமிட்டுள்ளார்.

இதற்கமை இந்தச் சட்டம் இன்று முதல் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்று பாராளுமன்ற செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலம் மீது கடந்த 23 ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக 156 பேரும் எதிராக 65 பேரும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.