இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சுகாதார அதிகாரிகள் எந்த அடிப்படையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தினார்கள் என்பது குழப்பமாக இருப்பதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அபாயம் இருக்கும் நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபுணர்களின் ஆலோசனையுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதா என்பது சந்தேகமாக இருப்பதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கொரோனா பரவல் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை என்று உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதில் கவனமின்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.