February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கப்பலில் இருந்த எரிவாயுவில் பிரச்சினை இல்லை’; நாட்டில் விநியோகிக்க அனுமதி

இலங்கைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயுவின் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், குறித்த கப்பலில் உள்ள எரிவாயு நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எரிவாயு கொண்டுவந்த இரண்டு கப்பல்கள் விநியோகத்தில் இருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஒரு கப்பலை நேற்று தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு பரிசோதித்து, விநியோகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை தரக் கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கும் சமையல் எரிவாயுவை மாத்திரம் நாட்டில் விநியோகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.