November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிதி நெருக்கடி நிலை காரணமாக சில வெளிநாட்டு தூதரகங்களை மூடுகிறது இலங்கை

வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்கள் மற்றும் கவுன்சல் அலுவலகங்களை மூடிவிடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு நெருக்கடி நிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஆரம்பமாக இலங்கைத் தூதரகம் ஒன்றும் கவுன்சல் அலுவலகங்கள் இரண்டும் மூடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜெர்மனியின் ப்ருக்பேர்ட் நகரில் உள்ள கவுன்சல் அலுவலகம் மற்றும் சைப்பிரஸில் உள்ள கவுன்சல் அலுவலகம் ஆகியன இவ்வாறு மூடப்படவுள்ளன.

ஜெர்மனியின் ப்ருக்பேர்ட் அலுவலகத்தின் நடவடிக்கைகள் பேர்லினில் உள்ள தூதரகம் மூலமும் நைஜீரிய தூதரக நடவடிக்கைகள் எகிப்தில் உள்ள தூதரகம் மூலமும் மேற்கொள்ளப்படவுள்ளன.