January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பண்டிகை காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய தேவை இல்லை’: சுகாதார அமைச்சர்

கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட பண்டிகைக் காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு பிரஜையைத் தவிர ஏனைய இலங்கையர்கள் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு பிரஜை சென்ற இடங்கள் தொடர்பான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளான 715 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 22 மரணங்களும் பதிவாகியுள்ளன.

எனினும், நாட்டை மீண்டும் முடக்கிவிட வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.