November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணி விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை’: சுமந்திரன் எம்.பி.

காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அமைச்சர்கள் வந்து வழங்கக் கூறினாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என தமிழ்த் தேசியப் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வன இலாகா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் காணிகளை சவீகரிக்கும் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் ஐந்தாறு வருடங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் இவ்விடயத்தைத் தீர்ப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தான் கோரியதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

“ஏனேனில், குறித்த நிகழ்ச்சி நிரலில் நாடு முழுவதும் இது நடைபெறுகின்றது. இடம்பெயர்வுகள் கூடுதலாக இருந்தமையால், மக்களுக்கு நீண்ட காலமாக காணிகளை பராமரிக்க முடியாது போனது.

இதனால் இலகுவாக அவர்கள் காணிகளைப் கையகப்படுத்துகிறார்கள். ஆனால், அதனை மாற்றியமைப்பதற்கு சிரமப்படுகின்றார்கள்.”

இந்த முறை அது சரிவரும் என நம்புவதாகவும், ஜனாதிபதியுடைய விசேட ஆலோசனையின் கீழ் அது விரைவு படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்துள்ளார்.