November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிளிநொச்சி கடற்பரப்பில் தரித்துள்ள 14 இந்திய படகுகளையும் அகற்ற நடவடிக்கை’: அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி கிராஞ்சி கடற்பரப்பில் தரித்து விடப்பட்டுள்ள 14 இந்திய இழுவைப் படகுகளையும் அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இந்திய இழுவைப் படகு விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட போதே, அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தரித்துள்ள இந்திய இழுவைப் படகுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனால்

இவ்வாறு தரித்து வைக்கப்பட்டுள்ள இழுவைப் படகுகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்ப் படலங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு படகுகள் தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு படகுகள் தொடர்பான உரிமை கோரலுக்கு அடுத்து, நீதிமன்ற விசாரணைக்கு சம்மந்தப்பட்டவர்கள் சமூகமளிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இழுவைப் படகுகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த படகுகளை விற்று, நிதியை தம்மிடம் தருமாறு இந்திய தூதுவர் சந்திப்புக்களில் கோருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.