நாட்டின் நிதி நெருக்கடி தொடர்ந்தால், அடுத்த மாதமாகும் போது இலங்கை கடனில் மூழ்கிவிடும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரனவக தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே, இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் முறையான நடவடிக்கை எதனையும் எடுக்கத் தவறினால், கடனில் மூழ்குவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரத்தின் பின்னரான வரலாற்றில் இலங்கை இதுபோன்ற ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததில்லை என்றும் சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் இலங்கை 500 மில்லியன் டொலர் இறையாண்மை முறிகளையும், 242 மில்லியன் டொலர் அபிவிருத்திக் கடன்களையும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் மொத்தமான 900 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது என்றும் பாட்டலி தெரிவித்துள்ளார்.
குறித்த கடன் தொகைகளைச் செலுத்தியதும் இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு பூச்சியமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.