February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

40 பாராளுமன்ற உறுப்பினர்களின் நீர்க் கட்டண நிலுவை 10 மில்லியனைக் கடந்தது

இலங்கையின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் நீர்க் கட்டண நிலுவை 10 மில்லியனைக் கடந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய நீர் வழங்கல் சபைக்குச் செலுத்தாத தொகை 10 மில்லியன் ரூபாய்களைக் கடந்துள்ளதாக தெரியவருகிறது.

நீர்க் கட்டணங்களைச் செலுத்தாத பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்தப் பட்டியலில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டணங்களை நிலுவையில் வைத்துள்ளனர்.

நீர்க் கட்டணங்களை செலுத்தாத நிலையில் 10 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கட்டண நிலுவை 18 இலட்சம் ரூபாய் எனவும் தெரியவருகிறது.