இலங்கை பொருளாதார இராஜதந்திரத்திலேயே பிரதானமாக கவனம் செலுத்துவதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அவர் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
இலங்கையின் பூகோள அமைவிடத்தை மையமாக வைத்து உரிய பயனடைய வேண்டும் என்று வெளியுறவு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தரை, வான் மற்றும் கடல் வழியாக விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருந்ததாகவும் இப்போது அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஒற்றுமையாக வாழ்வதில் இலங்கையின் எதிர்காலம் தங்கியிருப்பதாகவும் ஜயனாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.