இலங்கையின் உள்நாட்டு பொருளாதார நெருக்கடிகள் மற்றும், கொவிட் வைரஸ் தொற்றை அடுத்து வேலை இழப்பு போன்ற காரணிகளினால் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்து ஐந்தாயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளை தேடி சென்றுள்ளதாகவும், கடந்த ஆண்டின் தொகையை விடவும் இரண்டு மடங்கு அதிகரிப்பை இது வெளிப்படுத்துவதாகவும், தற்போதைய நிலையில் நாளாந்தம் 400-500 பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்கின்றனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்,இது எமது நாட்டிற்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை அல்ல, எனினும் இலங்கையில் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் 53 ஆயிரத்து 654 பேர் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளை தேடி சென்றிருந்தனர்.இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 5,685 பேர் வெளிநாடுகளுக்கு பணி நிமிர்ந்தம் சென்றுள்ளனர்.இந்த ஆண்டி இறுதிக்குள் இந்த தொகை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்தை அண்மித்ததாக பதிவாகும் என எதிர்பார்க்கின்றோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.