இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வராமல், வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு முதலீட்டுச் சபையின் பலவீனமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலட்சக் கணக்கான ரூபாய் பணம் செலுத்தப்பட்டு முதலீட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டமை தொடர்பில் கோப் குழு கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் வரி செலுத்துவோரின் பணத்தால் பராமரிக்கப்படும் இந்த அதிகாரிகள் இலங்கை முதலீட்டு சபையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறார்களா என கோப் குழு விசாரணை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுச் சபை 3,352 மில்லியன் ரூபாயை செலவிட்ட விதம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
முதலீட்டு சபை தொடர்பில் கோப் குழு கேள்விகளை முன்வைத்ததன் விளைவாக அதன் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பதவி விலகப் போவதாக அச்சுறுத்தியதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.