கிறிஸ்துமஸ் மற்றும் வருட இறுதி விடுமுறையைக் கழிக்க 60 க்கு அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பு உறுப்பினர்களும் இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலாக்கில் ஈடுபடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில உறுப்பினர்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது.
அந்த நாடுகளில் உள்ள தமது குடும்பத்தை அல்லது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் குழந்தைகளைப் பார்க்க அவர்கள் பயணிக்கவுள்ளனர்.
அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் விடுமுறைக் காலத்தைக் கழிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் 2022 ஜனவரி 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.