January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்ளூராட்சி தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க யோசனை!

இலங்கையில் உள்ளூராட்சி சபைகயுக்கான தேர்தலை ஒரு வருடத்தால் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் மூலம் அமைக்கப்பட்ட பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகின்றது.

இதன்படி பெப்ரவரி மாதத்தில் புதிய தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிட வேண்டும்.

இந்நிலையில் அந்தத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான யோசனை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.