நிதி அமைச்சர் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாது உண்மைகளை மக்களுக்கு கூறி நடவடிக்கைகளை எடுக்கின்றார்.அமைச்சரவையிலும் அதனை பேசுகின்றார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தவறுகளை மறைக்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.உண்மையில் அவ்வாறான அனுபவம் அவர்களுக்கே உள்ளது.ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் கோப் குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்படவிருந்த நிலையில் அப்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தனர் எனவும் அவர் கூறினார்,
இன்று நாம் பாரிய தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.இப்போதும் கடினமான காலகட்டமாகும்.ஆனால் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றோம்.தட்டுப்பாடுகள் இல்லாது மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அதேபோல் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.