
File Photo
எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இரண்டாயிரம் மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான எரிவாயு அந்தக் கப்பலில் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி அந்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றை இரு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாக அந்த அதிகாரசபை கூறியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே 3700 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் வந்திருந்த கப்பலில் இருந்த எரிவாயுவில் உள்ள கலப்பு உரிய தரத்தில் இல்லாத காரணத்தினால் அதனை தரையிறக்குவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இதேவேளை தற்போது நாட்டில் எரிவாயுவுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.