கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை நாடளாவிய ரீதியில் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார்.
பூஸ்டர் டோஸ்களை ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட மையங்களில் மட்டுமே செலுத்திக்கொள்ள வேண்டும் என பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.
“20 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்று மூன்று மாதங்கள் முடிந்திருந்தால் மூன்றாவது டோஸைப் பெறலாம் ” என்று அவர் கூறினார்.
ஒவ்வொருவரும் பூஸ்டர் டோஸை தாமதமின்றி பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், தடுப்பூசி மையங்களுக்கு வெளியே மக்கள் அநாவசியமாக வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் வைத்திய நிபுணர் கினிகே பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
எனினும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பிறகு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு மட்டுமே பூஸ்டர் டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வைத்திய நிபுணர் சமித்த கினிகே மக்களை அறிவுறுத்தினார்.