எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்துள்ளார்.
பொது நூலகத்தினைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தான் முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததாகவும் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட யாழ். நூலகத்தைப் பார்வையிட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். நூலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
சீன தூதுவர் யாழ். நூலகத்துக்கு கணணிகளையும் புத்தகங்களையும் அன்பளிப்பு செய்ததாகவும் அதற்கு தாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். நூலகத்தினை இணைய வழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா? என தாம் கோரிக்கை விடுத்ததாகவும், தாம் அது தொடர்பாக பரிசீலிப்பதாக சீன தூதுவர் கூறியதாகவும் முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.