இலங்கையில் கடந்த 44 நாட்களில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 727 விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்துகள் தொடர்பாக ஊடகங்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை வரையான 44 நாட்களில் 727 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் எரிவாயுவுடன் தொடர்புடைய 24 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.