January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பயணம்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் உட்பட தூதரக அதிகாரிகள் வடமாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அவர்கள், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டுள்ளனர்.

சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் பயணமாகவே வடக்கு சென்றுள்ளனர்.

சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் பயணத்தை முன்னிட்டு வடக்கில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.