பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 19 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தைப் பரப்பும் விதமான தமிழ் நூல் ஒன்றை வெளியிட்டதாக அஹ்னாப் ஜெஸீம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று புத்தளம் மேல் நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியுள்ளது.
இவரது கைது எழுத்து மற்றும் ஊடகச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என்று பல சிவில் சமூக அமைப்புகளும் தெரிவித்திருந்தன.
மேலும், இவர் வெளியிட்ட தமிழ் மொழி மூலமான நூலில் பயங்கரவாதத்தைப் பரப்பும் எவ்வித கவிதைகளும் இடம்பெறவில்லை என்று சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு மாதத்தின் முதலாம் மற்றும் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் பயங்கரவாதத் தடைப் பிரிவின் புத்தளம் அலுவலகத்தில் கையொப்பம் இட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.