May 13, 2025 9:52:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கு அருகில் வாள் வெட்டு; இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளது.

சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்று (15) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வரா சந்தியில் வழி மறித்து கடுமையான வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைக்கழக பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும், துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.