கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்க வேண்டாம் என ‘லிட்ரோ’ நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ள எரிவாயு தரத்தில் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் அதனை பொறுப்பேற்க வேண்டாம் என்றும் நுகர்வோர் அதிகாரசபை லிட்ரோ நிறுவனத்திற்கு இன்று அறிவித்துள்ளது.
3700 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் குறித்தக் கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் நாட்டில் சமையல் எரிவாயு விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை ஆராய்வதற்கு நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவை சம்பந்தப்பட்ட பிரிவினர் பரிசோதித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தொழிநுட்ப குழு கூட்டத்தில் குறித்த கப்பலில் இருந்த எரிவாயு குறிப்பிட்ட தரத்தில் இல்லை என தெரியவந்துள்ளது.
இதன்படி அதனை நாட்டில் இறக்குவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.