
கதிர்காமம் – பண்டாரகம அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த தந்தையும் மகளும் பலியாகியுள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், பண்டாரகம, கொத்தலாவல, ரேணுகாராம வீதியைச் சேர்ந்த எச்.எம்.எஸ் சமன் குமார (வயது 38), அவரது நான்கு வயது மகள் எச்.எம்.எஸ்.ஒனித்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக வீதி கலனிகம போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.