
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று (15) அதிகாலை வெளிநாட்டிற்கு பயணமாகியுள்ளார்.
நிதி அமைச்சர், துபாய் நோக்கி பயணித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தினூடாக துபாய்க்கு அவர் சென்றுள்ளார்.
இதேவேளை, தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.