January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தரமற்ற எரிபொருள் விற்பனை குறித்து முறைப்பாடுகளை ஆராய விசேட பொறிமுறை’

தரமற்ற பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதுடன்,இது குறித்த முறைப்பாடுகளை எங்கு செய்வது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும்,இது குறித்த முரண்பாடுகளை தீர்க்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் வலுசக்தி அமைச்சு இணைந்து நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் விதமாக வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய நெருக்கடி நிலைமைகளை ஆராயவும், பெற்றோலிய கூட்டுத்தாபன நெருக்கடி நிலைமைகள் மற்றும் முறைப்பாடுகளை ஆராய்ந்து தீர்வு காணவும், விசேட பொறிமுறை ஒன்றினை அமைத்துள்ளதுடன், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் வலுசக்தி அமைச்சு இணைந்து நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கூறிய அவர்,

குறிப்பாக கடந்த சில மாதங்களாக நாட்டில் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.தரமற்ற பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது குறித்து யாரிடம் புகாரளிப்பது, யார் உரிய அதிகாரிகள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது மக்கள் மத்தியில் நம்பிக்கையற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.