கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கண்டிப்பாக மூன்றாம் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை சகலரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.பூஸ்டர் தடுப்பூசியே உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என சுகாதார அமைச்சின் கொவிட் வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. உலக நாடுகள் இன்றும் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டே உள்ளனர். இலங்கையிலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திவிட்டதாக கூற முடியாது.ஆனால் தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்வதன் மூலமாக மக்களின் உயிர் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தியுள்ளோம்.
இப்போதும் இலங்கையில் பெரும்பாலான மக்கள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.ஆகவே சகலரும் மூன்றாம்தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறிய அவர்,
மூன்றாம் தடுப்பூசி ஏற்றுவதன் மூலமாக பரவலை கட்டுப்படுத்த முடியும்.உலக நாடுகள் இப்போது மூன்றாம் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளனர்.மூன்றாம் தடுப்பூசியே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறையாகும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே இலங்கைக்கும் மூன்றாம் தடுப்பூசி அவசியமாகும் என்றார்.