May 24, 2025 15:08:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குகிறோம்’: சஜித்

நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவியை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க தமது அலுவலகம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் இல்லாத அரசாங்கத்தைக் கொண்ட நாட்டில் தரமான எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.

தரமற்ற ஆட்சியை அகற்றுவதே தற்போது மேற்கொள்ள வேண்டிய விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.