January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எரிவாயு விபத்துகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும்’: அமைச்சர் மகிந்த

சிலிண்டர் வெடித்தலுடன் தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எரிவாயு நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எரிபொருள் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விபத்துகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக தான் அமைச்சரவையில் கலந்துரையாடுவதாகவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.