
மாகம் ருஹுணுபுர மகிந்த ராஜபக்ஷ துறைமுக வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இக்களஞ்சிய வளாகத்தின் நிர்மாணப் பணிகளை குறிக்கும் வகையில் பிரதமரினால் நினைவுப் பலகையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஷென்ஹொங் உள்ளிட்டவர்களுடன் துறைமுக வளாகத்தில் காண்காணிப்பு விஜயம்மொன்றையும் மேற்கொண்டுள்ளார்.
துறைமுக வளாகத்தில் உள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைக்கான மூலப்பொருட்களும், மனித வளமும் உள்நாட்டிலிருந்தே பெறப்படுகின்றன. 55.8 ஹெக்டேயர் பரப்பளவிலான டயர் உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் முதலீடு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஹம்பாந்தோட்டை முறைமுகம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும், எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.