
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.