
இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக இருந்த சஞ்ஜே மொஹொட்டால இராஜினாமா செய்ததில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முதலீட்டு சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் சிலரும் தமது பதிவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
இவர்களது இராஜினாமாக்களை ஜனாதிபதி ஏற்க மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ராஜா எதிரிசூரிய மிஹின் லங்கா விமான சேவையின் தலைவராகவும் பல்வேறு நாடுகளுக்கான தூதுவராகவும் செயற்பட்டுள்ளார்.