நாட்டில் மேலும் சில பொருட்கள் மீது இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இலங்கை எதிர்கொண்டுள்ள டொலர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கே நிதி அமைச்சர் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றம் தொழில்துறை சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான பொருட்கள் மீது இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று நிதி அமைச்சு இதுவரையில் தகவல் வெளியிடவில்லை.
நாட்டின் டொலர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா ஜப்பான், சீனா மற்றும் சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தான் இந்திய அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாகவும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.