சீனாவின் பிடியில் இருந்து இலங்கையை மீட்கும் பாரிய திட்டத்தில் இந்தியா இறங்கியுள்ளதாக எகொனொமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக இந்தியாவின் புதிய திட்டங்கள் குறித்த இந்திய ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
சீனாவின் பிடியில் இருந்து மீண்டுவரும் பேச்சுவார்த்தைகளை இந்தியா மற்றும் இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல்வேறு துறைகளிலும் இணைந்து செயற்படுவது குறித்த இறுதிச் சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்புப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளது.
இலங்கையில் இந்திய முதலீடுகளை ஊக்குவிப்பதும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பணப் பரிமாற்றம் மற்றும் முதலீடுகள் போன்ற நான்கு அம்சத் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.