மன்னார், அடம்பனைச் சேர்ந்த ‘கம்பிகளின் மொழி’ பிரேம் எழுதிய ‘பொன்னான பரிசு’ நூல் வைபவ ரீதியாக இன்று வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அதிபர் என்.நாகேந்திர ராசா தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பண்ணையில் இடம்பெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கலந்து கொண்டார்.
இதன் போது கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய ‘பொன்னான பரிசு’ நூல் வெளியீட்டு விழா வைபவ ரீதியாக இடம் பெற்றது.
நூலாசிரியருடன் இணைந்து குறித்த நூலினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் விருந்தினர்கள் இணைந்து வைபவ ரீதியாக வெளியிட்டு வைத்தனர்.