
இலங்கை முழுவதும் டிசம்பர் 14 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 14 ஆம் திகதி அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாகவே இடம்பெறும் என்று சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியதன் காரணமாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை டிசம்பர் 26ஆம் திகதி முதல் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகிக் கொள்ள தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ரயில்வே திணைக்களத்திளால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும் முன்னைய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததன் காரணமாக அதனை புறக்கணிக்க தொழிற்சங்கம் தீர்மானித்திருந்ததாகவும் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.