January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அதிவேக நெடுஞ்சாலையில் அம்பியூலன்ஸ்கள் இலவசமாக பயணிக்கலாம்”

இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் அம்பியூலன்ஸ்களுக்கு  கட்டணம்  அறவிடப்படமாட்டாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்பட்டது.

கொவிட் தொாற்று காரணமாக நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு  அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ்களிடம் கட்டணம் அறிவிடுவதை மே மாதம் 20 ஆம் திகதி முதல்  மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.