டிசம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய சட்டப்பூர்வ வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும், மேலதிகமாக 10 ரூபாவை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் விசேட நாணய மாற்று சலுகையின் கீழ் இதனை செயற்படுத்தியுள்ளதாக விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 15,000 அமெரிக்க டொலர்கள் வரை அல்லது அதற்கு சமனான வேறு வெளிநாட்டு நாணயத்தை பரிமாற்றிக்கொள்ள பல்வேறு முறைகளை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நாணயமாற்று விகித அடிப்படையில் 200 ரூபாவும், அதற்கு மேலதிகமாக ஊக்கத் தொகையாக 10 ரூபாவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்