
தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றுள்ளது.
அரச துறை நிறுவனங்களுக்கான வினைத்திறனான சேவையை மதிப்பிடும் பொருட்டு தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தால் 2018/2019ம் ஆண்டினை தழுவி தேசிய உற்பத்தித் திறன் விருதுகளுக்கான போட்டித் தொடர் நடைபெற்றது.
இதில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வொன்று நடத்தப்பட்டது.
இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளீதரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உற்பத்தித் திறன் பிரிவு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியதுடன், உற்பத்தித்திறன் குழுவினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.