January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் பயணமானார்!

File Photo

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஜனாதிபதி, சிங்கப்பூர் நோக்கி பயணமானதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி, தான் அங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் மருத்துவ சிகிச்சையொன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தின் அமர்வை ஜனவரி 18 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றையும் ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ள நிலையில் இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.