பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.
டிசம்பர் 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 70 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடைப்படையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, ஜனாதிபதியினால் மேலும் ஒரு வாரத்திற்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1947 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றம் ஐம்பது முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 புதிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றன.
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் சபாநாயகர் தொடர்வார். அவரது கடமைகள் முடிவடையாது.
இதேவேளை புதிய அமர்வை ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தி ஆரம்பித்து வைப்பார்.