January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எம்.எஸ். தௌபீக்கை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானம்’

வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினரையும் கட்சியில் அவர் வகித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வாசிப்பில் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எம்.எஸ். தௌபீக்கை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.