July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”டிசம்பர் இறுதியில் இன்னுமொரு கொவிட் அலை உருவாகலாம்”

vaccination New Image

இலங்கையில் இன்னுமொரு கொவிட் அலை உருவாகுவதை தடுக்க மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பூஸ்டர் தடுப்பூகளை பெற்றுக்கொள்ளாது பயணங்களை மேற்கொண்டால், இன்னுமொரு கொவிட் அலை உருவாகுவதை தடுக்க முடியாது என்று ஔடத உற்பத்திகள் மற்றும் விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதனால் காலம் தாழ்த்தாது மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் ஊசியை போட்டுக்கொள்ளுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அந்தப் பணியை பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை இனிவரும் காலங்களில் நாட்டில் பொது இடங்களுக்கு செல்லும் போது பூரண தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளமையை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.