January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி விபத்தில் தாயும் மகனும் பலி

ஆனையிறவுப் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஏ – 9 வீதியில் ஆனையிறவுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணம், நீராவியடிப் பகுதியை சேர்ந்த 58 வயதான இராதாகிருஷ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் பயனித்த தாயும் மகனும் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கியைச் செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.