June 16, 2025 14:37:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆசியாவின் இளவரசி’

உலகின் மிகப்பெரிய ‘நீல மாணிக்கம்’ இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

310 கிலோ எடையுடைய குறித்த மாணிக்கக் கல்லுக்கு என ‘ஆசியாவின் இளவரசி’ என பெயரிடப்பட்டுள்ளதாக இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி படுகெதர பிரதேசத்தில் இருந்து இந்த கல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பெறுமதி தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

ஹொரண பகுதியில் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ள குறித்தக் கல், இன்றைய தினம் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.