June 14, 2025 16:59:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

300 கிலோ எடையுடைய கடலாமையுடன் யாழில் ஒருவர் கைது!

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆமை உயிருடன் இருந்தமையினால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.